ETV Bharat / business

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை! - இறக்கம் கண்ட பங்குகள்

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பு இன்று வெளியானதைத் தொடர்ந்து இந்திய பங்குசந்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரியளவில் ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Dec 4, 2020, 5:53 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (டிச.03) வர்த்தகமானதைவிட சுமார் 265 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. மதியம் வரை ஏற்றம் - இறக்கம் என மாறி மாறி வர்த்தகமான இந்தியப் பங்குசந்தை, மதியம் இரண்டு மணிக்கு பின் பெரியளவில் ஏற்றம் கண்டது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 446.90 புள்ளிகள் (1 விழுக்காடு) அதிகரித்து 44,079.55 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 124.65 புள்ளிகள் (0.95 விழுக்காடு) உயர்ந்து 13,258.55 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.86 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதேபோல ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்டிராடெக், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பஜாஜ், பிபிசிஎல்(BPCL) ஹெச்.சி.எல்.டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

புதிய உச்சத்ததில் இந்திய பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி 46,560 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1,600 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 64,000 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 85.86 ரூபாய்க்கும், டீசல் 78.54 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரியும்' - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.