ETV Bharat / business

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்குத் திரும்பிய இந்தியப் பங்குச்சந்தை!

மும்பை: நேற்று திடீரென்று சரிவைக் கண்ட இந்தியப் பங்குசந்தை இன்று மீண்டும் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பிய இந்திய பங்குசந்தை!

author img

By

Published : Nov 26, 2020, 5:36 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (நவ. 25) வர்த்தகமானதைவிட சுமார் 90 புள்ளிகள் சரிந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும், அதன்பின் இந்தியப் பங்குசந்தை நண்பகலுக்குப் பின் மளமளவென ஏற்றம் கண்டு வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 431.64 புள்ளிகள் (0.98 விழுக்காடு) அதிகரித்து 44,259.74 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.60 புள்ளிகள் (1.00 விழுக்காடு) உயர்ந்து 12,987 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஜேஎஸ்டபிள்யூ (JSW) ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 7.02 விழுக்காடு உயர்ந்தது. மேலும், டாடா ஸ்டீல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் ஈச்சர் (eicher) மோட்டார்ஸ், மாருதி, பிபிசிஎல், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்குத் திரும்பிய இந்தியப் பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 70 குறைந்து 46,070 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 50 அதிகரித்து ஒரு கிலோ 60,050 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84.74 ரூபாய்க்கும், டீசல் 77.08 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: மீண்டும் களைகட்டிய மாருதி சுஸூகி விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.