ETV Bharat / business

முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்! - இறக்கம் கண்ட பங்குகள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது.

முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

author img

By

Published : Dec 7, 2020, 6:05 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (டிச. 06) வர்த்தகமானதைவிட சுமார் 190 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது.

இன்று மாலை சென்செக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து தனது வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 347.42 புள்ளிகள் (0.77 விழுக்காடு) அதிகரித்து 45,426.97 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97.20 புள்ளிகள் (0.73 விழுக்காடு) உயர்ந்து 13,355.75 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக யுபிஎல் நிறுவனத்தின் பங்குகள் 4.56 விழுக்காடு ஏற்றம்கண்டது. அதேபோல் அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஏர்டெல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம்கண்டன.

மறுபுறம் எஸ்பிஐ லைஃப், நெஸ்லே இந்தியா, கோடாக் வங்கி, JSWS ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 190 ரூபாய் குறைந்து 46,340 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 63,900 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.