மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (நவ. 26) 431 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. நேற்று சிறப்பான உயர்வு ஏற்பட்ட நிலையில், இன்று பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 110.02 புள்ளிகள் (0.25 விழுக்காடு) சரிந்து 44,149.72 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.05 புள்ளிகள் (0.14 விழுக்காடு) சரிந்து 12,968 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.82 விழுக்காடு உயர்ந்தது. அத்துடன், ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
அதேவேளை நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், எச்.சி.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து 45,890 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ஒரு கிலோ 64,700 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.91 , டீசல் ரூ.77.30 விற்பனையானது.
இதையும் படிங்க: இந்தியாவில் சூடுபிடிக்கும் தங்கத்தின் தேவை: ஐ.சி.ஆர்.ஏ.