கரோனா வைரஸ் தாக்கத்தால் தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் பல நிறுவனங்கள் உதவித் தொகை செலுத்திவருகின்றன. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
பொதுமக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதிவரை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங், அவுட்கோயிங் வசதி இலவசமாக வழங்கப்படும் எனவும் கூடுதலாக 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப்ரல் 20ஆம் தேதிவரை நீட்டித்தும் 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மொபைல் ப்ரீபெய்ட் காலத்தை அதிகரிக்க வேண்டும்- ட்ராய்