ETV Bharat / business

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் 'டோனட் பொருளாதாரம்' ஏன் முக்கியமானது? - கரோனாவுக்கு பிந்தை உலகம்

டோனட் பொருளாதார கோட்பாட்டின்படி பொருளாதார நடவடிக்கைகளின் நோக்கம் என்பது "இங்கு வாழும் அனைவரின் தேவைகளையும் வழிமுறைகளுக்குள் பூர்த்தி செய்வதாக" இருக்க வேண்டும்.

doughnut economics
doughnut economics
author img

By

Published : Jul 26, 2020, 7:15 PM IST

கோவிட் -19 தொற்று உலகை ஒரு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் உள்ள அடிப்படை குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகளவில் பெரும்பாலான மக்களில் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக உலகளாவிய வறுமை என்பது ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில், ‘டோனட் பொருளாதாரம்’ குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கேட் ராவொர்த் தனது 2017 புத்தகத்தில் ‘டோனட் எகனாமிக்ஸ்: 21 ஆம் நூற்றாண்டு பொருளாதார வல்லுனரைப் போல சிந்திக்க ஏழு வழிகள்’ என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலுள்ள ஒரு பொருளாதாரக் கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டின்படி பொருளாதார நடவடிக்கைகளின் நோக்கம் என்பது "இங்கு வாழும் அனைவரின் தேவைகளையும் வழிமுறைகளுக்குள் பூர்த்தி செய்வதாக" இருக்க வேண்டும். இது ஒரு எளிய வட்ட வரைபடத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

doughnut economics
டோனட் பொருளாதார கோட்பாடு

இந்த வரைபடம் அடிப்படையில் ஒரு டோனட்டை போல இரண்டு வளையங்களைக் கொண்டுள்ளது. டோனட்டின் மையத்திலுள்ள துளை உலகிலுள்ள மக்களில் எத்தனை விகிதம் உணவு, நீர், சுகாதாரம், அரசியல் கருத்து சுதந்திரம் போன்ற அடிப்படை தேவைகளை அடையமுடியாமல் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

வெளிப்புற வளையத்திற்கு அப்பால் உள்ள பகுதி பூமியின் சுற்றுச்சூழல் வரம்புகளைக் குறிக்கிறது. இரண்டு வளையங்களுக்கிடையேயான பகுதி, அதாவது டோனட், "சுற்றுச்சூழல் ரீதில் பாதுகாப்பான மற்றும் சமூக ரீதில் நியாயமான இடம்", இதில்தான் மனிதகுலம் வாழ முயற்சிக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய சவால் என்பது வளையத்தின் நடுப்பகுதியிலிருக்கும் மக்களை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது. இதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த கோட்பாடுகளே விளக்குகிறது.

அதே நேரத்தில், 'டோனட்' பகுதியிலும் அதிகப்படியான சுமையை சுமத்த முடியாது, ஏனெனில் இது காலநிலை மாற்றம், ஓசோன் மண்டல தேசம், நீர் மாசுபாடு, உயிரினங்களின் இழப்பு உள்ளிட்ட மற்ற ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, டோனட் பொருளாதாரத்தின் நோக்கம் என்பது பெரும்பாலான மக்கள் 'டோனட்' பகுதிக்குள் நுழைந்து, அங்கேய அவர்கள் 'நிலைத்திருக்க' அனுமதிப்பதாகும்.

கரோனா தொற்றுக்கு பிந்தை பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதும், "டோனட்" பொருளாதாரத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட உலகின் முதல் நகரமாக ஆம்ஸ்டர்டாம் ஆனது.

இந்த நகரம் நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. கார்பன் நடுநிலையாக மாறுவதற்கும், வட்ட பொருளாதாரத்திற்கு மாறுவதற்கும் ஏற்ற திட்டங்களை வைத்துள்ளது. அதாவது அனைத்து பொருள்களையும் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். இது அந்த பொருள்கள் குப்பைகளுக்குச் செல்வதைத் தடுக்கும்.

உதாரணமாக, வீட்டுவசதி என்பது நகரத்தின் ஒரு முக்கிய சவாலாகும், ஏனெனில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு மக்களால் வாடகையைத் தவிர பிற பில்களை செலுத்த முடிவதில்லை. பொதுமக்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய, இப்போது அதிகமான வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. ஆனால் இந்தக் கட்டுமான முறையால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட மாசுபடுத்தும் வாயுகளில் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இது பெரும் காலநிலை சவாலை ஏற்படுத்துகிறது.

எனவே, தற்போது ​​டோனட் கோட்பாட்டின்படி, நகரம் வீட்டுவசதிகளை ஏற்படுத்தும் அதே நேரம் நகரின் மற்ற பகுதிகளுடனான இணைப்பு உள்ளிட்டவற்றையும் கருத்தில்கொண்டே கட்டுமானங்களை ஏற்படுத்திவருகிறது.

ஆம்ஸ்டர்டாம் ஏற்றுக்கொண்ட டோனட் கோட்பாடு தற்போது காலத்தின் தேவை என்று கேட் ராவொர்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். உலகிலுள்ள வளங்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் ஆம்ஸ்டர்டாம், மற்ற நகரங்களுகா்கு ஒரு சிறந்த எடுத்துக்காடாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் ‘COVID-19 Risks Outlook: A Preliminary Mapping and Its Implications’ என்ற தலைப்பில் ஒரு சமீபத்திய அறிக்கையை வெளியிட்டிருந்தது. நமது முன்னுரிமைகளை தெளிவாக அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பை இந்த கரோனா தொற்று வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது, ​​2030ஆம் ஆண்டு இருக்கும் அபிவிருத்தி இலக்குகளை தள்ளிப்போடுவதற்கு பதிலாக, சமூக சமத்துவத்தையும், நிலையான வளர்ச்சியையும் மீட்டெடுக்க இது ஒரு சிறப்பான வாய்ப்பை நமக்கு அளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரும் காலங்களில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொடும் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.