இந்தியா ஐடியாஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். அதில் பேசிய அவர், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்து, சில்லறை வர்த்தக நடவடிக்கை, மின்சாரம், எரிசக்தி நுகர்வு ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. அரசு அறிவித்த தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் நாட்டின் வளர்ச்சியில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், தொழில் துறையினரின் தேவையை அரசு உணர்ந்து செயல்படும். நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் வேளாண் துறை முக்கியப் பங்காற்றுகிறது” என்றார்.
இதையும் படிங்க: எரிசக்தி துறையில் இத்தாலி முதலீடு - பெட்ரோலியத் துறை அமைச்சர் உறுதி!