ETV Bharat / business

அந்நிய செலாவணி கையிருப்பில் 73 கோடி டாலர் இழப்பு!

மும்பை: பல வாரங்களாக முன்னேறி வந்த அந்நிய செலாவணி கையிருப்பு, தற்போது 73 கோடியே 92 லட்ச டாலர்கள் குறைந்து 41,414 கோடி டாலராக உள்ளது.

முன்னேறி வந்த அந்நிய செலாவணி கையிருப்பு, 73 கோடி டாலரை இழந்து தத்தளிப்பு!
author img

By

Published : Apr 27, 2019, 9:01 PM IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12ஆம் தேதி வரை 41,488 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத்தில், அந்நிய செலாவணி 73 கோடியே 92 லட்ச டாலரை இழந்து, 41,414 கோடி டாலராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டு வாரத்தின்படி, ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 72கோடியே 86 லட்ச டாலரை இழந்து, 386,033 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பில் மாற்றமில்லாமல் 2,330 கோடி டாலராகக் காணப்பட்டது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 32 லட்சம் டாலர் குறைந்து 145.5 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 74 லட்சம் டாலர் குறைந்து 335.4 கோடி டாலராகவும் இருந்தது எனப் புள்ளி விவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போனது.

Intro:Body:

head : முன்னேறி வந்த அந்நிய செலாவணி கையிருப்பு, 73 கோடி டாலரை இழந்து தத்தளிப்பு!

lead: மும்பை: பல வாரங்களாக முன்னேறி வந்த அந்நிய செலாவணி கையிருப்பு, 73 கோடியே 92 லட்ச டாலரை இழந்து, 41,414 டாலராக இருந்தது.

body : 

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத்தில்  73 கோடியே 92 லட்ச டாலரை இழந்து, 41,414 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 72கோடியே 86 லட்ச டாலரை இழந்து, 386,033 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு மாற்றமில்லாமல் 2,330 கோடி டாலராகக் காணப்பட்டது.

சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 32 லட்சம் டாலர் குறைந்து 145.5 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 74 லட்சம் டாலர் குறைந்து 335.4 கோடி டாலராகவும் இருந்தது எனப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போனது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.