உலகளவில் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனம், தனது பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ட்வீட் செய்யும் வார்தை வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து ஹெச்டி வீடியோ பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ட்வீட்டை திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை, Undo Send என அழைக்கின்றனர். இந்த புதிய வசதிகள் அனைத்தும் முதற்கட்டமாக பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆய்வில் ட்விட்டர் நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
மேலும், ட்வீட் திருத்தம் செய்யும் பொத்தன் ட்வீட் பதிவிடப்பட்டுடன் 30 வினாடிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பயனர்களுக்குப் பிரத்யேக ஃபான்ட், ஹேஷ்டாக்,புதிய ஐகான்கள், தீம் வண்ணம் போன்றவை கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.