டெல்லி: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 20% விழுக்காடு பங்குகளை பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட டோட்டல் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதானி நிறுவனம், “தங்களின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 20% விழுக்காடு பங்குகளை டோட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் தொழிலை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சூரிய மின்னாற்றல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியை மேம்படுத்தவும், அதன் பகிர்மானத்தை விரிவுபடுத்தவும் இது உதவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
அதானிக்குக் கடன் வழங்கினால், எஸ்பிஐ பசுமைப் பத்திரங்களை விற்போம் - பிரான்ஸ் நிறுவனம்
மேலும், நிலையான ஆற்றலை இயற்கை முறையில் மேம்படுத்தி, அது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் தனது அறிக்கையில் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதானி நிறுவனத்தின் எரிசக்தி தொழிலில் 2018ஆம் ஆண்டே டோட்டல் நிறுவனம் முதலீடு செய்தது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி, எரிவாயு விநியோக வணிகம், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆகியன உள்நாட்டில் கையாளப்பட்டது.
முன்னதாகவே அதானி கேஸ் லிமிடெட் நிறுவனத்தில் 37.4 விழுக்காடு பங்குகளையும், தம்ரா எல்.என்.ஜி திட்டத்தில் 50 விழுக்காடு பங்குகளையும் டோட்டல் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் விமான நிலையம் : உச்சம் தொடப்போகும் கேரள அரசு Vs அதானி குரூப் சண்டை!
மேலும், உலகத்திலேயே மிகப் பெரிய சூரியஒளி மின்சக்தி முனையத்தை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2015ஆம் ஆண்டு அதானி நிறுவனம் நிறுவ தொடங்கியது. அதன் வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் 648 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும், சூரிய மின்சக்தி முனையத்தின் செயல்பாடுகள் தொடங்கும்பட்சத்தில், நிறுவனம் இயற்கை ஆற்றல் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டிப்பிடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.