இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. இதனால், இந்திய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துவருகின்றன.
குறிப்பாக, இன்று ஒரே நாளில் தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.97 விழுக்காடு வரை ஏற்றம் கண்டு 1938.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்குச்சந்தையிலும் 3.23 விழுக்காடு வரை ஏற்றம் கண்ட ரிலையன்ஸ் நிறுவநத்தின் பங்குகள் 1,938.70 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. ரிலையனஸ் தனது ஜியோ தளத்தின் 25.24 விழுக்காடு பங்குகளை 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று 12ஆவது வாரத்தில் 13ஆவது நிறுவனமாக, குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் ஜியோவில் 0.15 விழுக்காடு பங்குகள் குவால்காம் நிறுவனத்தின் வசம் செல்லும்.
இதையும் படிங்க: 12 வாரங்களில் 13ஆவது முதலீட்டை பெற்றுள்ள ஜியோ