ஊரடங்கால் வீட்டில் முடங்கிய மக்கள் தங்களது நண்பர்களுடன் பேசி மகிழும் விதமாக, பெரும்பாலானோர் வீடியோ கால் வசதியை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக, ஆன்லைன் செயலிகளை நாடும் மக்கள் மத்தியில், கூகுளின் மீட் செயலி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கூகுளின் பிரீமியம் வீடியோ கான்ஃபரன்சிங் 'மீட் செயலியை 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினந்தோறும் 3 மில்லியனக்கும் அதிகமான மக்கள் தரவிறக்கம் செய்து வருவதாக, ஜி சூட் துணைத் தலைவர் ஜேவியர் சொல்டெரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும், சமீபத்தில் தான் மீட் செயலியை ஜிமெயில் மூலமாகவும் அணுகும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏர்டெல்லுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம்!