பிரபல கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாகக் கையாண்டு புதிய சாதனங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் உலகில் அனைத்து சாதனங்களையும் ஸ்மார்ட் டிவைசாக மாற்றி மக்கள் உபயோகிக்கும் வகையில் அதீத வசதிகளுடன் வடிவமைத்து வருகின்றனர்.
அந்த வகையில், கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நெஸ்ட் வைஃபை சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சாதனத்தை வைஃபை ரவுட்டராகவும் ஸ்மார்ட் ஸ்பீக்கராகவும் உபயோகிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். ஆனால், இணைய வேகம் குறைவாக இருக்கும் சமயங்களில், இந்த சாதனத்தின் வேகம் குறைவாக உள்ளதாக பயனர்கள் மத்தியில் புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், கூகுள் நெஸ்ட் தயாரிப்பு மேலாளர் சஞ்சய் நோரோன்ஹா தனது பதிவில், ”நெஸ்ட் வைஃபை, கூகுள் வைஃபை சாதனங்களில் இணைய வேகம் குறைவாக இருந்தாலும் அதி வேகத்தில் செயல்பட வைக்கும் புதிய சாஃப்ட்வேர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளோம். வையர்லெஸ் நெட்வொர்க் மூலம் இவை சாதனத்துடன் இணைக்கப்படும் போதும் வேகத்தை இரு மடங்கு அதிகப்படுத்தும். பயனர்கள் ஒரே நேரத்தில் பல வீடியோ அழைப்புகளிலும், பெரிய அளவிலான கேமிங்கிலும் ஈடுபட முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய சாஃப்ட்வேர், சாதனத்தின் பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்!