ETV Bharat / business

மோட்டர் வாகனத்துறையின் ஜாம்பவான் லீ லகோக்கா மறைவு - க்ரைஸ்லர்

வாஷிங்டன்: மோட்டர் வாகனத் துறையின் ஜாம்பவானான அமெரிக்காவைச் சேர்ந்த லீ லகோக்கா உடல்நலக்குறைவால் காலமானார்.

ford
author img

By

Published : Jul 4, 2019, 11:06 AM IST

மோட்டர் வாகனத்துறையின் முன்னணி நிறுவனங்களான போர்டு, க்ரைஸ்லர் போன்றவற்றில் தலைமை பொறியாளராகவும், விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளவர் லீ லகோக்கா.

1946ஆம் ஆண்டு போர்டு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியத் தொடங்கிய லீ, அதன்பின்னர் விற்பனை பிரிவுக்கு மாறினார்.

1957ஆம் ஆண்டு போர்டு நிறுவனத்தின் முஸ்டாங்க் ரக கார்களை வெற்றிகரமான பிராண்டாக மாற்றிய பெருமை லீ லகோக்காவுக்கே சேரும். ஒரு கட்டத்தில் போர்டு நிறுவனர் ஹென்ரி போர்டை தாண்டி தனது ஆதிக்கத்தைச் செலுத்தியதால் அந்நிறுவனத்தில் வெளியேற்றப்படுகிறார்.

பின்னர் க்ரிஸ்லர் கார்பரேஷன் நிறுவனத்தில் சேர்ந்த லீ, திவால் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை மிகப்பெரும் லாபம் மிக்க நிறுவனமாக மாற்றிக்காட்டி அசத்தினார். சுமார் 50 ஆண்டுகால தீவிர மோட்டர்வாகனத்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார் லீ லகோக்கா.

போர்டு, க்ரைஸ்லர் போன்ற நிறுவனத்தின் முதுகெலும்பாக்க இருந்த லீ லகோக்கா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.