காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட செயற்குழுக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. வேலைவாய்ப்பின்மை உயர வாய்ப்புள்ளதாகக் கூறிய சோனியா காந்தி, குடும்பத்திற்கு 7,500 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் 12 கோடி பேர் தங்களின் வேலைகளை இழந்தனர். பெருளாதாரம் ஸ்தம்பித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை உயர வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து குடும்பத்திற்கும் 7,500 ரூபாய் நிதியுதவியாக வழங்க வேண்டும்.
வேலைகளை இழந்து தவித்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவே விரும்புகின்றனர். அவர்கள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதிரியான பேரிடர் காலத்தில், அவர்களுக்கு உணவு வழங்கி பாதுகாக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை 11 கோடி பேர் மேற்கொண்டுவருகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்கள் பங்கு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 19 சோதனைக்குப் பிறகு ஒருவழியாக நெகடிவ் கண்ட 62 வயது மூதாட்டி!