நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் 15 நாள்களில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது முக்கியமான பட்ஜெட். ஏனெனில் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பொருளாதார அறிஞர்கள், தொழிற்சாலை உற்பத்தியாளர்களுடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பட்ஜெட் விசேஷமானது என்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி, கடந்தாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் 6.1 சதவிகிதமாகக் சரிந்தது. 2011-12ஆம் ஆண்டிற்குப் பிறகு, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மிக மெதுவான வளர்ச்சி இதுவாகும்.
-
Unwavering in our commitment to become a five trillion dollar economy!
— Narendra Modi (@narendramodi) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Today, had in-depth consultations with economists, business leaders and policy experts from various fields on diverse range of subjects. Such synergy augurs well for national progress. https://t.co/KItYkgLxeO
">Unwavering in our commitment to become a five trillion dollar economy!
— Narendra Modi (@narendramodi) January 9, 2020
Today, had in-depth consultations with economists, business leaders and policy experts from various fields on diverse range of subjects. Such synergy augurs well for national progress. https://t.co/KItYkgLxeOUnwavering in our commitment to become a five trillion dollar economy!
— Narendra Modi (@narendramodi) January 9, 2020
Today, had in-depth consultations with economists, business leaders and policy experts from various fields on diverse range of subjects. Such synergy augurs well for national progress. https://t.co/KItYkgLxeO
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள், இந்தாண்டு (2020-21) வளர்ச்சி வெறும் 7.5 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல தசாப்தங்களில் மிகக் குறைவான வளர்ச்சியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'வளர்ச்சி மந்தநிலையை எதிர்கொள்ள பட்ஜெட் நிதி ஊக்கத்தை உருவாக்க வேண்டும்' என்பதாகும். இருப்பினும் அரசு பொருளாதார சுணக்கத்திலிருந்து விடுபட முதன்மையாக எழும் பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்க வேண்டும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அதில் முதலாவது முக்கியக் காரணம் இந்திய அரசிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை. ஆகவே உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையும்போது, வரி வசூலிப்பில் ஈடுபடலாம். வரி விதிப்பின் மூலம் பெறப்படும் வருவாயைக் கொண்டு அரசை செயல்படுத்தலாம்.
![Should the upcoming budget provide a fiscal stimulus to the economy? Puja Mehra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/reasons-change-banks-1068x713_3009newsroom_1569829922_522.jpg)
இந்தாண்டு (2019-20) வரிவிதிப்பின் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இந்த நிதியாண்டின் (2019-20) முதல் ஏழு மாதங்களில் அரசிற்கு கிடைத்த மொத்த வரி வசூல் என்பது இலக்கைவிட குறைவாக உள்ளது. இதுமட்டுமின்றி 2009-10ஆம் நிதியாண்டைக் காட்டிலும் வருவாய் குறைவு என்று பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர் (சி.ஜி.ஏ.) அலுவலகத் தரவுகள் கூறுகின்றன. இதற்கிடையில் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) வரி வருவாயையும் அரசு தியாகம் செய்துள்ளது.
அடுத்து, பண வரவிற்கான ஆதாயம் வரிவிதிப்பில்லாத வருமானங்கள். இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே பணத்தை அரசு பெற்றுள்ளது. இதுதவிர பி.பி.சி.எல். ( BPCL), ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் இந்தாண்டு நிறைவடைந்துவிடும்.
இருந்தாலும், வரி வருவாய் பற்றாக்குறையை இவை ஈடுசெய்யுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் 2019-20ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டம்வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 16.53 சதவிகிதம் மட்டுமே சாத்தியமானது.
இரண்டாவது, பொது உள்கட்டமைப்புகளுக்கு செலவிடுவதும் பயன்தராது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட நாள்கள் பிடிக்கும். தற்போது வளர்ச்சிக்கு அவசரமான ஒரு ஊக்கம் தேவை. மூன்றாவது வரியை குறைப்பதன் மூலமாகவும் ஒரு தூண்டுதலை வழங்க முடியும்.
அந்த வகையில் தனிநபர் வரியை குறைப்பதன் மூலமாகவும் பயன்பெற முடியாது. ஏனெனில் நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவிகித மக்களே வருமான வரி செலுத்துகின்றனர். இந்த முயற்சி கடந்தாண்டு (2019) பிப்ரவரி மாதம் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் முயற்சிக்கப்பட்டது.
அதன்படி வரிச் சலுகைகள் மிகுந்த அந்த பட்ஜெட்டை அப்போதைய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தது. அதனால் ஒவ்வொருவரின் பணப்பைகளிலும் ரூ.1000 வரை சேமிக்கப்பட்டது.
மேலும், ஒரு வீட்டின் சொத்தை விற்பனை செய்வதற்கான மூலதன விலக்கு இரண்டாக நீட்டிக்கப்பட்டது. அதாவது முதல் வீட்டுக்கு கடன் வாங்குவதுபோல் இரண்டாவது வீட்டுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதிலும் வட்டிச் சலுகை கிடைக்கும்.
இதுமட்டுமின்றி தனிநபரின் ஆண்டு வருமானத்தின் நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல் வங்கி, அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடு வட்டி வருவாய் விலக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. எனினும் பொருளாதார மந்தநிலை 2019ஆம் ஆண்டு தீவிரமடைந்தது.
நான்காவதாக, ஒரு தூண்டுதலுக்கு நிதியளிப்பதற்காக அரசின் கடன்களை அதிகரிக்கும் விருப்பம் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கடன் வாங்கும்போது, அது பெரும்பாலும் பொருளாதாரத்தின் சேமிப்பாளர்களிடமிருந்து கிடைக்கிறது. வங்கிகள் அரசின் கடனை சேமிப்பாளர்கள் தங்களிடம் வைக்கும் வைப்புகளைப் பயன்படுத்தி வாங்குகின்றன. ஆகவே, பொருளாதாரத்தின் மொத்த சேமிப்பைவிட அரசின் மொத்த கடன் வாங்குதல் இருக்கக் கூடாது.
ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களின் கடன் சுமை என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் எட்டு முதல் ஒன்பது சதவிகிதத்திற்குள் வரும். வீட்டு சேமிப்பு தற்போது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 6.6 சதவிகிதமாக உள்ளது.
கடனுக்கு நிதியளிக்க இது போதாது என்பதால், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 2.4 சதவிகிதத்தை வெளிநாட்டவர்களிடமிருந்து அரசு கடன் வாங்கியுள்ளது. இந்திய சேமிப்புகள் வருமானத்தின் மெதுவான வளர்ச்சி, போதுமான வேலைவாய்ப்பு இல்லாததால் அதிகரிக்கவில்லை.
அமெரிக்க-ஈரான் பதற்றம் அதிகரிப்பதால் உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடிய நேரத்தில், இந்திய ரூபாயின் மாற்று விகித மதிப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், நாட்டின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செலவினங்களைக் குறைக்காது.
இருப்பினும் ஒழுங்கீனமாகச் செல்லும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும். பிரதான் மந்திரி கிஸான் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவை கிராமப்புற மக்கள் தொகையின் ஒரு பகுதியின் வருமானத்தையும் நுகர்வுகளையும் அதிகரிக்க முடியும்.