ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று (ஏப்ரல் 21) அறிவித்தது. இதனால் இன்றைய வர்த்தகம் தொடங்கியதும் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் ரிலையன்ஸ் பங்குகளின் விலை 10 விழுக்காட்டிற்கு மேல் (சுமார் 350 புள்ளிகள்) அதிகரித்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 742.84 புள்ளிகள் அதிகரித்து 31,379.55 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 205.85 புள்ளிகள் அதிகரித்து 9,187,30 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளைத் தவிர ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே இந்தியா, மாருதி, ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் ஐந்து விழுக்காடு வரை உயர்ந்தன. ஓ.என்.ஜி.சி, எல்&டி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவிலும் ஷாங்காய், ஹாங்காங். சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தைச் சந்தித்தன. அதே நேரம் டோக்கியோ பங்குச் சந்தை சரிவைக் கண்டது. ஐரோப்பிய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.16 டாலர்கள் குறைந்து 18.91 டாலராக விற்பனையாகி வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து 76.68 ரூபாயாக வர்த்தகமானது.
இதையும் படிங்க: கரோனா அச்சம் - அதிகரிக்கும் மருத்துவ காப்பீடுகள்!