பங்குச் சந்தையை நெறிமுறை படுத்தும் வகையில் அதன் வர்த்தக உறுப்பினர்களுக்கு சில வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், கரோனா காரணமாக அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கரோனா சூழல் தொடர்வதால், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அந்த தளர்வுகளை நீட்டித்துள்ளது.
விதிப்படி, அரையாண்டுக்கான நிதி தணிக்கையை செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தற்போது தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தணிக்கையை டிசம்பர் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என செபி தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த தணிக்கையை அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை நிறுவனங்களானது, தங்களின் தணிக்கையை டிசம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா சூழல் தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.