நாளுக்கு நாள் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துவரும் நிலையில், ஒரு பீப்பாயின் விலை 60 டாலரிலிருந்து 30 டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.
மேலும் பீப்பாயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலையும் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு இது இக்கட்டான காலம் என்றாலும், இந்தியாவிற்கு இது உகந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
மேலும் டீசல் விலை 12 ஆண்டுகள் கண்டிடாத அளவிற்கு குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் விலை குறைந்ததால், இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலை நீடித்துக்கொண்டே வந்தால், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யை மலிவான வகையில் வாங்கலாம். அவ்வாறு நடைபெற்றால், இந்தியாவிற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மிரட்டும் கொரோனா: தள்ளாடும் உலகப் பொருளாதாரம்