ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கணிப்பைத் தாண்டி சுமார் 7.35 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை உயர்வே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம்(NSO) வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், காய்கறிகளின் பணவீக்கத்தை 2018 டிசம்பருடன் ஒப்பிடும்போது 60.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
2018 டிசம்பரில் 2.11 விழுக்காடாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5.54 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளின்படி, ஒட்டுமொத்த உணவு பணவீக்கம் டிசம்பரில் 14.12 விழுக்காடாக இருந்தது. இது 2018 டிசம்பர் மாதத்தில் - 2.65 விழுக்காடாக இருந்தது. 2019ஆம் நவம்பர் மாதம், இது 10.01 விழுக்காடாக இருந்தது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்ற 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் சில்லறை பணவீக்கத்தில் 7.39 விழுக்காடாக இருந்தது. அதன்பின்னர், இப்போதுதான் பணவீக்கம் மீன்டும் 7.35 ஆக உயர்ந்துள்ளது
இதேபோல, 'பருப்பு வகைகளின் பணவீக்கம் 15.44 விழுக்காடாகவும், இறைச்சி மற்றும் மீன்' பணவீக்கம் 10 விழுக்காடாகவும் உள்ளது.
இதையும் படிங்க: ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!