நஷ்டத்தில் இயங்கும் ஏழு விமான நிலையங்களை தனியார் மயாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதன்மூலம், இழப்பு குறைந்து விமானப் போக்குவரத்து துறைக்கும் அதன் உள்கட்டமைப்பு வசதிக்கும் ஊக்கமளிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு-தனியார் கூட்டமைப்பு மூலம் இந்த செயல் திட்டம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து துறைசார் நிபுணரான அஜன் தாஸ்குப்தா கூறுகையில், அரசின் நல்ல இந்த முடிவு சிறப்பான முன்னெடுப்பு. ஏழு நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன், ஆறு லாபத்தில் இயங்கும் விமான நிலையத்தையும் சேர்த்து விற்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
இரண்டையும் இணைத்து இந்த முடிவை எடுத்துள்ளது சாதுரியமானது. இல்லையென்றால், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களை மட்டும் யாரும் வாங்க முன்வரமாட்டார்கள் என்றார்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, புவனேஸ்வர் விமான நிலையத்தை ஜர்ஸ்குடாவுடன், இந்தூர் விமான நிலையத்தை ஜபல்பூருடன், குஷிநகர்ஸ கயா நிலையங்களை வராணாசியுடன், அம்ரிஸ்தர் நிலையத்தை கங்ராவுடன், ராய்பூர் நிலையத்தை ஜல்கவோனுடன், திருச்சி நிலையத்தை சேலத்துடன் இணைத்துள்ளது.
இந்த இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த நிபுணர் அமேயா ஜோஷி, இது தனியாமயமாக்கும் திறனை துரிதமாக்கும், இதன் மூலம் விமான நிலைய கட்டமைப்பு, விரிவாக்க வேலைகள் விரைந்து நடைபெறும் எனக் கூறினார்.
தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமான நிலையங்கள் கடந்தாண்டு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு