ஊரடங்கால் பெரும்பான்மை தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும், குழுவாக சந்தித்துப் பேசவும் மைக்ரோசாஃப்ட் டீம், ஜும், வெபினார் உள்ளிட்ட செயலிகளை உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூம் உள்ளிட்ட செயலிகள் தகவல் பரிமாற்றத்திற்கு பாதுகாப்பானவை அல்ல என்றும், பயனாளர் கணக்கு விவரம், ஊர், உள்ளிட்ட தகவல்களை இந்த செயலிகளின்மூலம் பரிமாறிக்கொள்வது பாதுகாப்பானது அல்ல எனவும் தனது பங்கு தாரர்களை இந்திய தேசிய பங்குச்சந்தை எச்சரித்துள்ளது.
மேலும் ஜூம் அழைப்புகளில் பங்குகள் குறித்த செய்திகளை விவாதிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு உபயோகித்தால் உடனுக்குடன் அப்டேட் செய்து பாதுகாப்பாக உபயோகிக்குமாறும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஊரடங்கு காலக்கட்டத்தில் தான் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே பிழையான ஆங்கிலத்தில் வரும் மின்னஞ்சல்கள் உள்ளிட்டவையையும் உடனுக்குடன் அழித்துவிட வேண்டும். இணையதளப் பெயர்களை உன்னிப்பாக கவனித்து உபயோகியுங்கள். "Coronavirus" அல்லது "Covid" உள்ளிட்ட வார்த்தைகளுடன் வரும் குறுஞ்செய்திகளை திறந்து படிக்க வேண்டாம் எனவும் தன் பங்குதாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: