ETV Bharat / business

பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்படாத சொத்துகள் ஆறு மடங்கு அதிகரிப்பு!

கோட்டா (ராஜஸ்தான்): பாங்க் ஆப் பரோடா வங்கியின் செயல்படாத சொத்துகள் ஆறு மடங்கு அதிகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2014ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 11 ஆயிரத்து 876 கோடி ரூபாயிலிருந்து செயல்படாத சொத்துகள் (என்பிஏ) தற்போது 73 ஆயிரத்து 140 கோடியாக உள்ளது.

author img

By

Published : May 3, 2020, 9:13 PM IST

NPAs of BoB, Indian Bank surge multi-fold in 6 years: RTI data  NPAs of BoB  NPAs of Indian Bank  NPA  Banking sector in India  business news  பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்படாத சொத்துகள் ஆறு மடங்கு அதிகரிப்பு  வங்கி செயல்படாத சொத்துகள், எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, என்.பி.ஏ. சுஜீத் சுவாமி, தகவல் அறியும் உரிமைச் சட்டம்

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பாங்க் ஆப் பரோடா வங்கியின் செயல்படாத சொத்துக்கள் (என்பிஏ) ஆறு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து ரூ.73,140 கோடியாக உள்ளது.

இதேபோல் ஆறு ஆண்டுகளில் இந்தியன் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.32 ஆயிரத்து 561 கோடியே 26 லட்சமாக உள்ளன. அதன்படி, பேங்க் ஆப் பரோடாவின் செயல்படாத சொத்துகள் 2014 மார்ச் இறுதியில் 11 ஆயிரத்து 876 கோடியிலிருந்து 2019 டிசம்பர் இறுதியில் ரூ.73 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்த வங்கிகளில் செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2014 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 35இல் இருந்து 2019 டிசம்பர் மாத நிலவரப்படி ஆறு லட்சத்து 17 ஆயிரத்து 306 ஆக உயர்ந்து காணப்படுகிறது.

இந்தியன் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் எட்டாயிரத்து 68 கோடி ரூபாயிலிருந்து, 32 ஆயிரத்து 56 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்படாத கணக்குகள் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ஐந்து லட்சத்து 64 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது, இது மார்ச் 31, 2014 நிலவரப்படி இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 921 ஆக இருந்தது.

இந்தத் தகவல்கள் சமூக ஆர்வலர் சுஜீத் சுவாமி நீதிமன்றத்தின் முறையிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றவை ஆகும். மேலும், “எஸ்.எம்.எஸ் சேவை கட்டணம், குறைந்தபட்ச இருப்பு கட்டணங்கள், லாக்கர் கட்டணங்கள், டெபிட்-கிரெடிட் கார்டுகள் சேவை கட்டணங்கள் ஆகியவவை மூலமாக வங்கிகள் சம்பாதித்த பெரும் தொகை பற்றிய தரவுகளையும் காட்டுகிறது.

ஆர்.டி.ஐ. தகவலின்படி, பாங்க் ஆப் பரோடா 2018 ஏப்ரல் 1 முதல், 2020 பிப்ரவரி 29 வரை எஸ்எம்எஸ் கட்டணம் மூலம் ரூ.107.7 கோடியை வசூலித்தது. இதே காலகட்டத்தில் எஸ்எம்எஸ் சேவை கட்டணம் மூலம் சுமார் 21 கோடி ரூபாய் இந்தியன் வங்கி வசூலித்துள்ளது.

சமூக ஆர்வலர் சுவாமி, "தகவல் அறியும் உரிமை கோரல் தாக்கல் செய்வதற்கான முக்கிய நோக்கம் 2014 முதல் 2020 வரை இரண்டு தேசிய வங்கிகளின் என்.பி.ஏ அளவைக் கண்டுபிடிப்பதே ஆகும்.

எனினும், “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவைகளிடமிருந்தும் இதே தகவல்களைத் தேடியுள்ளேன். ஆனால் அவை இன்னும் தரவுகளை வழங்கவில்லை” என்றார்.

இதையும் படிங்க: இந்தியர்களின் தகவல்களைத் திருடுகிறதா சியோமி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.