இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி, ஏப்ரல் மாதம் ஒரு காரைக்கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் பொருளாதாரம் நிலையில்லாமல் இருப்பதால் பலரும் அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போடும் மனநிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாருதி சுசூகி நிறுவனம் 'Buy-Now-Pay-Later Offer' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காகச் சோழமண்டலம் நிதி நிறுவனத்துடன் மாருதி சுசூகி கைகோர்த்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களைப் பெற்று, இரண்டு மாதங்களுக்குப் பின் இஎம்ஐ தொகையைச் செலுத்தத் தொடங்கினால் போதும். "இந்த புதிய திட்டத்தின் மூலம் எவ்வித கூடுதல் நிதிச் சுமையும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய வாகனங்களைப் பெற முடியும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை ஜூன் 30ஆம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பணியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள்: மஹிந்திரா அறிவிப்பு!