வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சிக்கலில் உள்ள இச்சூழலிலும், நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி டிசம்பரில் 4.3 சதவிகிதமாக உயரும் என ஜப்பானிய ஆய்வு நிறுவனமாக நோமுரா (Nomura) கணித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் புள்ளிவிவர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 6.3, 2021ஆம் ஆண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முக்கியக் கொள்கை விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.
மத்திய வங்கி பிப்ரவரி 2020இல் இடைநிறுத்தப் பயன்முறையில் இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி டிசம்பர் சந்திப்பில் ரெப்போ விகிதத்தை 5.1 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருந்தது.
நோமுரா வளர்ச்சி வாய்ப்புகளைப் பற்றி கவலை கொண்டுள்ளது. மேலும் மந்தநிலைக்கு காரணமான சுழற்சி காரணிகள் 2020 வரை தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறுகிறது.