Latest International News சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் போடப்பட்ட Automatic Exchange of Information என்ற ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 75 நாடுகள் உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்தின் மத்திய வரி நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் யாருடைய பெயர்கள் உள்ளது என்றோ, எத்தனை கணக்குகளின் தகவல்கள் வழங்கப்பட்டது என்ற தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை.
இந்த Automatic Exchange of Information ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இப்போது வழங்கப்பட்டுள்ள பட்டியலில் 2018ஆம் ஆண்டு மூடப்பட்ட கணக்குகள் பற்றிய தகவல்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த பட்டியல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதாலேயே அவை கறுப்புப் பணம் என்று நாம் கருதத் தேவையில்லை. அதற்கு உரிய வரி செலுத்தவில்லை என்றோ, முறையற்ற முறையில் அது சம்பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே அது கறுப்புப் பணம் ஆகும்.
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த சுவிஸ் வங்கி தகவல்கள் கறுப்புப் பணத்துக்கு எதிரான போரில் கிடைத்துள்ள முதல் வெற்றி என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: புதிதாக வீடுகட்ட கடன் வாங்கினால் உடனடி பலன்!