குளிர்காலத்தில் எத்தனை கிரீம்களை பயன்படுத்தினாலும் குளிர் காற்றின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பது சற்று கடினம் தான். இதன் விளைவாக, முகம் வறண்டு, பாதிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், குளிர் காற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கிளன்சர்: சருமத்தை சுத்தப்படுத்துதலுடன் நாளை தொடங்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இந்த வரிசையில், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்படாமல் இருக்க, கிரீம் அல்லது எண்ணெய் சார்ந்த ஃபேஸ் வாஸ்களை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்குவதால் சருமம் பொலிவாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், மாதத்திற்கு ஒரு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

டோனர்: இதற்கு ஆல்கஹால் இல்லாத டோனரை தேர்வு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை கொண்ட டோனர்கள், குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். இது சருமத்தை புத்துணர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மையை கொண்டுள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளை மூடுவது மற்றும் சொறி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் நீக்கும்.
மாய்ஸ்சரைசர்: நம்மில் பெரும்பாலானோர் எந்த ஆய்வும் செய்யாமல், சந்தையில் கிடைக்கும் மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துகிறோம் . ஆனால், வல்லுநர்கள் செராமைடுகள் (Ceramides), ஷியா பட்டர் (Shea Butter) அல்லது கொழுப்பு அமிலங்கள் கொண்ட மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சன்ஸ்கிரீன்: பின்னர் சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்பட வேண்டும். இது, சூரிய ஓளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், நமது சருமத்தை பாதிப்பதில் இருந்து தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், சூரிய வெளிச்சத்தால் சருமத்தின் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவற்றை தடுத்து வயதான தோற்றதை ஏற்படுத்துவதில் இருந்து பாதுகாக்கிறது. SPF30 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனையும் தேர்வு செய்ய வேண்டும்.
உணவில் கவனம்: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க கீரிம்களை பயன்படுத்தினாலும், உடலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிப்பது முக்கிய பங்கை வகிக்கிறது. "The importance of skin barrier function in maintaining skin hydration" என்ற தலைப்பில் 2020ம் ஆண்டு Journal of Clinical and Aesthetic Dermatology நடத்திய ஆய்வில் சரும பிரச்சனைகளை தடுக்க உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என்கிறது.
இரவு தூங்க செல்வதற்கு முன், மென்மையான க்ளென்சரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது. பின்னர் கற்றாழையுடன் வைட்டமின் ஈ மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து சருமத்தில் தடவ வேண்டும். இது வறட்சியின் விளைவைக் குறைத்து, காலையில் முகத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
இதையும் படிங்க: முகத்தில் எண்ணெய் வழியுதா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணிப்பாருங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.