கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்தாலும் அதன் தாக்கம் வளர்ந்த மேற்கத்திய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா கரோனா வைரஸ் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கையை, உலகளவில் மிகத்தீவிரத்துடன் கையாண்டது.
எந்த முன்னணி நாடுகளும் மேற்கொள்ளாத வகையில் ஆரம்ப கட்டத்திலேயே 21 நாட்கள் ஊரடங்கை நாடு முழுவதும் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இருப்பினும் முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனமான சர்வதேச நிதியம், இதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியத்தின் ஆசிய பிரிவு இயக்குநர் சாங் யாங் ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கலும், நிதி பற்றாக்குறையும் உள்ள நிலையில் இந்தியா தீவிரமான லாக்டவுனை அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு இது தடையாக இருந்தாலும் தைரியமான இந்த முடிவை சர்வதேச நிதியம் வரவேற்கிறது. மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, ஆசிய நாடுகளின் வளர்ச்சி சிறப்பாக விளங்கி வருகிறது. எனவே, சிக்கலிலிருந்து மீண்டு வந்தவுடன் ஆசியா சீரான வளர்ச்சியைப் பெறும்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட் -19: 20 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த சாம்சங்!