கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2020ஆம் ஆண்டில் வீடுகளின் விற்பனை 49% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 57 ஆயிரத்து 940 யூனிட்கள் மட்டுமே இந்தியா முழுவதும் வீடுகள் விற்பனை நடந்துள்ளது.
இதுகுறித்து அனராக் சொத்து ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில், '' 2019ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 2020ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வீடு விற்பனை 49 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் இதன் வித்தியாசம் 46 சதவிகிதத்திலிருந்து 51 சதவிகிதம் வரை உள்ளது.
இதேபோல் 2020ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கான வீடு விற்பனை சென்ற காலாண்டை ஒப்பிட்டால் 72 சதவிகிதம் குறைந்துள்ளது. மார்ச் மாத இறுதியிலிருந்தே ரியல் எஸ்டேட் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு; ஆய்வறிக்கை கூறும் தகவல்