இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சுருக்கம் கண்ட இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு, வெளிநாட்டு தேவையின் காரணமாக மீண்டு எழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலைக்குப்பின் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கை மீட்சி கண்டுள்ளது.
இதன் காரணமாக வர்த்தகர்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டிற்கு மேல் நிச்சயம் இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் - விவசாய சங்கம் அறிவிப்பு