இந்தியாவின் நிதிச் சிக்கலுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக வாராக்கடன் கருதப்படுகிறது. இந்திய வங்கிகள் தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ அளித்த கடன் தொகையை நீண்ட நாள்களாக வசூல்செய்ய முடியாமல் முடங்கியிருக்கும் பட்சத்தில் அவை வாராக்கடன் என அழைக்கப்படும். இந்த வாராக்கடன் காரணமாக இந்திய வங்கிகள் கடும் நிதிச் சுமையைச் சந்தித்துவருகின்றன.
இத்தகையச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் சுமார் 6 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வர்த்தகச் சூழல் மேம்படுவதற்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் இந்த உயர்வு நிகழ்ந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த உயர்வு பொதுத் துறை வங்கிகளில் எவ்வளவு நிகழ்ந்துள்ளது, தனியார் வங்கிகளில் எவ்வளவு நிகழ்ந்துள்ளது என ஆய்வில் வெளிவரவில்லை. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க சிறப்பு நிதிச் சலுகை, கடன் சலுகையை அரசு அறிவித்துள்ளது. இது மேலும், கடன் சுமையை அதிகரிக்குமா என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கடும் நெருக்கடியில் போயிங் - லட்சக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்!