டெல்லி: விரைவில் 5ஜி அலைக்கற்றையின் முழு பயன்பாடு இந்தியாவில் நிறுவப்படும் எனத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “5ஜி சேவையின் முழு பயன்பாட்டையும் மக்கள் அனுபவிக்க, அதன் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியை அரசு விரைவில் வழங்கவுள்ளது. உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து நிற்கிறோம்.
அதன் பங்காக 5ஜி தொழிநுட்பமும் இருக்கும். முற்றிலும் உள்நாட்டில் 5ஜி சேவைக்கான கட்டமைப்பை உருவாக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது உலக அரங்கில் நம்மை உயர்த்திப் பிடிக்கும். தரவு பொருளாதாரத்திலும் நாம் சிறந்து விளங்கமுடியும்.
இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் ராணுவம் முதல் அனைத்து துறைகளும் வளர்ச்சியைக் காணும். அரசு ஒரு அதிவேக திறன்கொண்ட இணைய இணைப்பை அனைவருக்கும் விரைவில் பரிசளிக்கும்” என்று கூறினார்.