நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தருமகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தேவா (22). இவர், செம்பனார்கோவில் ரயிலடி தெருவில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு வருவது வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுமி தனியாக வீட்டில் இருக்கும் போது வீட்டிற்குள் புகுந்த தேவா, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து மறுநாளும் இதேபோன்று நடந்ததால் பயந்துபோன சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையதில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டு, தேவா மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.