உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாசனம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நெல்லிக்காய் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வனாலயத்தில் ஏழாம் வகுப்பு பயிலும் நித்தீஷ் (12 வயது) என்ற சிறுவன் யோகாசனம் செய்து அசத்தியுள்ளார்.
இதில், கரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்-சி கொண்ட நெல்லிக்கனி உட்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லிக்கனி மீது அமர்ந்து, எட்டு உலக சாதனை ஆசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், பதஞ்சலி உலக சாதனை நிகழ்ச்சிக்காக 10 நிமிடங்களில் 40 கடுமையான ஆசனங்களையும் செய்து சிறுவன் நித்தீஷ் அசத்தினார். நெல்லிக்காய் மீது எட்டு ஆசனங்கள் செய்தது மட்டுமின்றி நிர்லம்ப சக்கர நடராஜ ஆசனம், உத்தித விபத்த திரிகோண ஆசனம், திரிவிக்கிரமாசனம், நடராஜசனம், விருட்ச விச்சிகாசனம், ஏக புஜண்ட மயூராசனம் உள்ளிட்ட ஆசனங்களையும் செய்து அவர் அசத்தினார்.
இதையும் படிங்க : கடும்பனி சூழ யோகாசனம் செய்த இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள்!