ETV Bharat / briefs

‘வாழு வாழவிடு’ - உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று! - பூச்சிக் கொல்லி

சிட்டுக்குருவி இனம் மெள்ள மெள்ள அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிட்டுகுருவி
author img

By

Published : Mar 20, 2019, 8:57 AM IST

Updated : Mar 20, 2019, 1:51 PM IST

உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெப்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்துவருகின்றன. அதில் ஒன்று தான் சிட்டுக்குருவி.

உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாகப் பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கிவரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது.

உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்துவந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களிலிருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும், சூழல் மாசுபாடும் சில முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. அலைப்பேசி கோபுரங்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

குருவி இனத்தைப் பார்க்காமலேயே வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை செயற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். சில சூழலியல் செயற்பாட்டாளர்கள் தாங்கள் சந்திக்கும் மாணவர்கள், இயற்கை செயற்பாட்டாளர்களிடம் குருவி வளர்ப்புக்கு அட்டைப் பெட்டி வழங்கி வீடுகளில் வைத்து குருவிகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்கள்.

அட்டைப் பெட்டிகளில் குருவி சென்று வர ஓட்டை அமைத்து உள்ளே உமி, வைக்கோல் வைத்து அடைக்கப்பட்டுள்ள இந்த கூடு தற்போது பல பகுதியில் பிரபலமாகிவருகிறது. எனவே, வருங்கால சந்ததியினர்கள் அறிந்துகொள்ளும் வகையில் குருவி உள்பட அழிந்து வரும் அனைத்து பறவைகளையும் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இப்புவியைச் சார்ந்த அனைத்தும் உயிரும் ஏதோ ஒரு வகையில் மனிதனைக் காக்கும் தன்மையைக் கொண்டு விளங்குகிறது. அவைகளை நசுக்காமல் அதனை அதன் போக்கில் வாழ விடுவோம்.

Intro:Body:

news

Conclusion:
Last Updated : Mar 20, 2019, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.