ETV Bharat / briefs

தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகளில் கோவிட்-19 வார்டு அமைக்கப்படுமா? - ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க முடிவு

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என புகார்கள் வந்த நிலையில், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகளில் கோவிட் வார்டு அமைக்கப்படுமா?

author img

By

Published : Jun 12, 2020, 8:20 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 12) நிலவரப்படி, தமிழ்நாட்டில் 40,698 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள், இறந்தவர்கள் தவிர, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளிலும், தனிமை முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 28,924 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 2569 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 650 பேருக்கும், திருவள்ளூரில் 1752 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என புகார்கள் வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தாலும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரோனா தொற்று நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு ரயில்வே துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பெட்டிகளை கரோனா சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கையில் நோயாளிகள் படுக்க வைக்க திட்டமிட்டு, நடு படுக்கைக்கள் ( மிடில் பெர்த்) அகற்றப்பட்டன. பெட்டியில் உள்ள ஒரு கழிவறையை மரப்பலகை கொண்டு அடைத்து குளியலறையாக மாற்றப்பட்டு அங்கு ஷவர் உள்ளிட்ட வசதி வைக்கப்பட்டது. ரயில் பெட்டியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேப்டாப் மற்றும் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து இடங்களிலும் மருத்துவ உபகரணங்களுக்காக 230 வாட் திறன் கொண்ட சார்ஜிங் வசதி பொருத்தப்பட்டது.

முதல்கட்டமாக சந்தேகத்துக்குரியவர்களை தனிமைப்படுத்தும் மையமாகவும், தேவைப்பட்டால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது. நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் ஒரே கேபினில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. தற்போது சென்னையில் மருத்துவமனைகள், அறிகுறிகள் தென்படாதவர்கள் தங்க வைக்கப்படும் சமூக கூடங்களில் இடமில்லாமல், கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு பெட்டியில் 16 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 10 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் ரயில்வே துறை சார்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான 5 ஆயிரத்து 231 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிக்கு சிசிச்சை அளிக்க ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் இதுபோன்ற 400க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தற்காலிகமாக மாற்றியமைத்துள்ளது.

தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 24 ரயில் நிலையங்களில் இதுபோன்ற சிகிச்சை ரயில் பெட்டிகளை வைக்க முடிவு செய்துள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாக அதிக கரோனா பாதிப்பு உள்ள தெலங்கானாவில் 3 ரயில் நிலையங்களை இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், 10 ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ரயில் நிலையங்களை இந்திய ரயில்வே தயார் நிலையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.