ETV Bharat / briefs

ஹைதராபாத் - கொல்கத்தா; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?

இன்றை ஐபிஎல் கிரிக்கெட்  தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ஹைதராபாத் - கொல்கத்தா; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?
author img

By

Published : May 5, 2019, 1:06 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் இன்றுடன் முடிவுடையும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால், நான்காவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவந்தது.

இதையடுத்து, பெங்களூரு அணியுடன் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததால், தற்போது, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கொல்கத்தா அணிக்கு பிரகாசமாக அமைந்துள்ளது. அதற்கு அந்த அணி செய்ய வேண்டிய ஒரே விஷயம், இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்துவதுதான். அப்படி இல்லாவிட்டால், நெட் ரன் ரேட் முறையில் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

ஹைதராபாத்
srh

ஹைதராபாத், இந்தத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, எட்டு தோல்வி என 12 புள்ளிகளைப் பெற்று +0.577 என்ற நெட் ரன்ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், கொல்கத்தா அணியோ, 13 போட்டிகளில் ஆறு வெற்றி, எட்டு தோல்வி என 12 புள்ளிகளை பெற்று +0.173 என்ற நெட் ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதனால், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா அல்லது ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொல்கத்தா
KKR

முன்னதாக, இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி, மும்பை அணியை வீழ்த்தியது. இதனால், இன்றைய ஆட்டத்திலும் கொல்கத்தா அணி, மீண்டும் மும்பை அணியை தோற்கடிக்கும் என்று கூறுகின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.