கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆர். பொன்னாபுரம் பகுதியில் தாலுகா காவல் நிலைய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப், அசான் முகமது என்பதும், தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இருவரும் மகாலிங்கபுரம், நெகமம், வடக்கிபாளையம், தாலுகா காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து இருசக்கர வாகனம் திருடியது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.