இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் தகுந்த இடைவெளியுடன் திருக்கோவிலூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.