ETV Bharat / briefs

தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கட்டண விவகாரம் : நிர்ணயக் குழு தலைவரை அணுக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்கள்

சென்னை : தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதால், கட்டணம் தொடர்பான புகார்களுக்கு அவரை அணுகுமாறு அறிவுறுத்தி, உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 29, 2020, 5:10 PM IST

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016ஆம் ஆண்டு கல்லூரிகளின் செலவுக் கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 - 17 முதல் 2018 - 19 வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்தக் கட்டணங்கள் அமலில் இருந்தன.

2019 - 20 முதல் 2021 - 22ஆம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து, கட்டண நிர்ணயக் குழு 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், விதிகளைப் பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 696 கல்லூரிகளில், 285 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், செலவுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு, ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களை சம்ர்ப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்டண விகிதங்களை சமர்ப்பிக்காத 411 கல்லூரிகளுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், கட்டண விகிதங்களை மாற்றியமைக்கக் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில், பல கல்லூரிகள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி உயிரிழந்து விட்டார். இதனால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான குழுவுக்கு புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிபதிகள் கட்டணக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதால், மனுதாரரை கட்டணம் தொடர்பாக அவரை அணுகுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க : ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.