ETV Bharat / briefs

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து! - விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

Sudden explosion at a firecracker factory in Virudhunagar

author img

By

Published : Sep 30, 2020, 6:28 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில்பட்டியில் கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது.

சென்னையில், உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற இந்த ஆலையில் 12 அறைகளில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையை சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து நடத்திவருகிறார்.

வழக்கம்போல், பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் 60 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெயிலில் உலர்த்துவதற்காக காயவைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின.

இதைக் கண்ட தொழிலாளர்கள் அனைவரும் அறையிலிருந்து வெளியே ஓடிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.