காஞ்சிபுரம் நகராட்சிக்குள்பட்ட வேளிங்கபட்டரை, பிள்ளையார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றுவருகிறது.
இந்த முகாமில் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெறும். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக தினம்தோறும் 12 மருத்துவ முகாம்கள் மூலம் 140 மருத்துவ முகாம் நடைபெற்றதில் இதுவரை 54 ஆயிரம் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைகள் உள்பட மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருள்கள் மற்றும் இதர கடைகள் திறந்திருக்கும், உணவகங்கள் இரவு எட்டு மணிவரை இயங்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா மீட்பு நடவடிக்கை, முதலமைச்சருக்கு அமைச்சர் பாராட்டு!