ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் கேப்டன் மோர்கன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் உத்தப்பா, ஸ்டோக்ஸ், ஸ்மித், சாம்சன், பராக் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இதனால் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே ராஜஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் அதிரடியாக விளையாடி வந்த பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.