திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேலை இல்லாமல் பழங்குடி இன மக்கள் தவித்துவருகின்றனர்.
இதையடுத்து, திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட சென்றான் பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்றான் பாளையம் கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவற்றை தமிழ்நாடு அரசின் சார்பாக, திருவள்ளூர் மாவட்ட இருளர் சங்கத் தலைவர் இர. பிரபு வழங்கினார்.
மேலும், இலவசமாக வழங்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் தமிழ்நாடு அரசுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.