அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய தென் மண்டல துணைச் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், "கரோனா பரவல் அதிகமுள்ள ஜோலார்பேட்டை திருச்சி பாலக்காடு போன்ற வெளி மண்டலங்களில் சரக்கு ரயில் ஓட்டுநர்கள் 72 மணி நேரம் தங்கி வேலை செய்ய வைப்பதை கட்டாயமாக்க கூடாது.
கோவிட்-19 பரவல் தீவிரமடைந்து வரும் வேலையில் மத்திய அரசு அறிவித்துள்ள தனி நபர் பாதுக்காப்பிற்கான தகுந்த இடைவெளியை மதிக்காமல், அப்ரன்டீஸ் மாணவர்களுக்கு ரயில் இன்ஞ்சின்களை இயக்க கற்றுத்தர 4 பயிற்சி ஓட்டுனர்களை அனுப்பி பயிற்சி வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அற்ப காரணங்களுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு விதிமுறைக்கு புறம்பாக பழிவாங்கும் நோக்கத்தோடு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தினார்.
தகுந்த தனி நபர் இடைவெளியை கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : உலகின் மிக நீளமான ரயில் தடமாக மாறும் ஹூப்ளி ரயில் நிலையம்!