உலகளவில் பிரபலமான மொபைல் கேம் பப்ஜிக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் (9,731 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை பப்ஜி நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக (22,457 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் பப்ஜி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜியை தரவிறக்கம் செய்துள்ளனர். கரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். சிறுவர்களும் இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.
டிக் டாக் தடையால் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!
இதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது. அண்மையில் டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து, பப்ஜிக்கு ஏன் தடை விதிக்கவில்லை என பெற்றோர்களும், பப்ஜி எதிர்ப்பாளர்களும் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர்.
பப்ஜி தென்கொரிய நிறுவனமான ப்ளூஹோலுக்குச் சொந்தமானது. இந்த விளையாட்டை விளம்பரப்படுத்த சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் நிறுவனம் இணைந்துகொண்டது. இதனால் பப்ஜி உலகளவில் பிரபலமடைந்தது. பப்ஜி முழுக்க முழுக்க சீனாவைச் சேர்ந்த நிறுவனம் இல்லையென்பதால் மத்திய அரசின் தடையிலிருந்து தப்பியது.
என்ன ஆனது பேஸ்புக்கின் டிக்டாக்?
பப்ஜிக்கு அடுத்தப்படியாக கடந்த ஆறு மாதங்களில் கரேனா ஃப்ரீ ஃபயர் 30 கோடி டாலர் (2,245 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளது. க்னைவ்ஸ் அவுட் 26 கோடி டாலர் (1,946 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளது. கால் ஆஃப் டியூட்டி மொபைல் 22 கோடி டாலர் (1,646 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளது.