ETV Bharat / briefs

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி! - நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

மயிலாடுதுறையில் திடீரென மூடப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

அரசு நெல் கொள் முதல் நிலையம் திறப்பு
அரசு நெல் கொள் முதல் நிலையம் திறப்பு
author img

By

Published : Oct 5, 2020, 9:56 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக 104 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தினந்தோறும் 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டுவந்தன.

ஆனால் விவசாயிகள் தினந்தோறும் 2000 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்ததால் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 25 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் குறுவை பருவம் முடிவடையும் முன்னரே விவசாயிகளிடம் அறிவிக்கப்படாமலே கொள்முதல் நிலையங்கள் கடந்த 21ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்து வைத்த 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகளானது விற்பனை செய்ய வழியில்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே வைத்து காத்து கிடந்தனர். மேலும் விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகளானது மழையில் நனைந்ததால் அதிலுள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளதால் ரூ.53 விலை ஏற்றத்துடன் சன்னரக நெல் குவிண்டாலுக்கு1958 ரூபாயும், பொதுரக நெல் 1918 ருபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (அக். 05) முதல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டதால் விவசாயிகள் நிம்மதியடைந்ததோடு, தினந்தோறும் கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கிவிட்டதால் ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.