தஞ்சாவூர்: காணும் பொங்கலையொட்டி இன்று (ஜனவரி 16) கும்பகோணத்தில் பிரம்மாண்டமான கோலப்போட்டி நடைபெற்றுள்ளது. இதில் எராளமான பெண்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வித விதமாக கோலமிட்டு அசத்தினர்.
பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று (ஜனவரி 16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சியின் 19-வது வட்டத்தில், மாபெரும் வண்ண கோலப்போட்டி, சிறுவர் சிறுமியர்களுக்கான ஓவியப்போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
தாய் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற வண்ண கோலப்போட்டி மற்றும் வீர விளையாட்டுப் போட்டிகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி, தாய் தொண்டு நிறுவன தலைவர் இராமமூர்த்தி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: நாங்களும் பொங்கல் கொண்டாடுவோம்.. சென்னை ஏர்போர்ட் சிஐஎஸ்எப் வீரர்கள் அதகளம்..!
90 நிமிட காலகெடுவில் நடைபெற்ற வண்ண கோலப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட விதவிதமான அழகிய வண்ண கோலங்களை இட்டு, காண்போரை வியக்க வைத்து தங்களது தனித்தறனை வெளிப்படுத்தியுள்ளனர். கோலப் போட்டியை ஐந்து பேர் கொண்ட நடுவர் குழுவினர் ஆய்வு செய்து, மிக சிறந்த 10 கோலங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.