ETV Bharat / briefs

தாமிரபரணி- நம்பியாறு இணைப்புத் திட்டம்: எம்.எல்.ஏ. இன்பதுரை ஆய்வு! - தமிழ்நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு

திருநெல்வேலி: தாமிரபரணி நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

author img

By

Published : Jun 16, 2020, 11:39 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலில் கடக்கிறது. இதை தடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

முதல்கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் திட்டம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இதையடுத்து சுமார் ரூ.800 கோடி மதிப்பில் திட்டத்தை முடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார்.

தற்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகள் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான இன்பதுரை இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் கட்டடப் பணிகள் குறித்தும், கால்வாய் வெட்டும் பணிகள் குறித்தும் அங்கிருந்த பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது திட்ட வரைபடத்தை எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் காட்டினர். இந்த மூன்றாம் கட்ட பணிகள் மூலைக்கரைப்பட்டி பெருமாள்நகரில் தொடங்கி நம்பியாற்றில் கால்வாய் இணைக்கப்படும்.

இத்திட்டம் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 252 குளங்கள், ஐந்து ஆயிரத்து 260 கிணறுகள், 23 ஆயிரத்து 40 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சி வழியே நடத்துக- வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.