ETV Bharat / briefs

நானோ டி.என்.ஏ ஓரிகமி : எச்.ஐ.வி தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்கும் எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்! - டி.என்.ஏ ஓரிகமி

பாஸ்டன் : நானோ டி.என்.ஏ ஓரிகமி நுட்பத்தைப் பயன்படுத்தி எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஐ.டி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

நானோ டி.என்.ஏ ஓரிகமி : எச்.ஐ.வி தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்கும் எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்!

author img

By

Published : Jul 2, 2020, 10:31 PM IST

நேச்சர் பதிப்பக குழுமத்தின் வெளியீடான இயற்கை நானோ உயிரியல் தொழிற்நுட்பம் என்ற அறிவியல் இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரையில், "அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆய்வகத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களின் நோயெதிர்ப்பு உயிரணுக்களிலிருந்து வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி, அதன் மூலமாக எச்.ஐ.வி தொற்று நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் இந்த நானோ டி.என்.ஏ துகள்கள் எச்.ஐ.வியின் புரதங்கள் அல்லது ஆன்டிஜென்கள் பூசப்பட்டு, வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வகையில் துல்லியமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

எம்.ஐ.டியின் உயிரியல் பொறியியல் பேராசிரியர் இர்வின் கூறுகையில், "இயற்கை வைரஸ்கள் துகளின் மேற்பரப்பில் வரிசைப்படுத்தப்பட்ட ஆன்டிஜென்களைக் கொண்ட நானோ துகள்கள் ஆகும், மேலும் இதுபோன்ற துகள் ஆன்டிஜென்களை திறம்பட அடையாளம் காண நோயெதிர்ப்பு அமைப்பு (குறிப்பாக பி செல்கள்) உருவாகியுள்ளன என்று கருதப்படுகிறது.

மற்ற ஆராய்ச்சியாளர்கள் பாலிமர்கள், லிபோசோம்கள் அல்லது சுய-அசெம்பிளிங் புரதங்கள் போன்ற பிற வகையான செயற்கை துகள்களைப் பயன்படுத்தி சப்யூனிட் தடுப்பூசிகளை உருவாக்க முயன்றனர். ஆனால் அந்த பொருள்கள் டி.என்.ஏ ஓரிகமியைப் போல துல்லியமாக வைரஸ் புரதங்களின் இடத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் ஐகோசஹெட்ரல் துகள்களை ஒரு பொதுவான வைரஸாக ஒத்த அளவு மற்றும் வடிவத்துடன் வடிவமைத்தனர்" என்று கூறுகிறார்.

இந்த ஆய்வில் எம்.க.டி ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றிய ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் பேரா. ஜெயஜித் தாஸ் கூறுகையில், "இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எச்.ஐ.வி தடுப்பூசியை உருவாக்கு முயற்சியில் நம்பை பெரிதும் வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஏனெனில் இந்த ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் எச்.ஐ.வி ஆன்டிஜென் தற்போது மனிதர்களே இல்லாமல், ஒரு நவீன மருத்துவ பரிசோதனையில் புரத நானோ துகள் வழியே சோதிக்கப்படுகிறது" என்றார்.

கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும், அதே ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பலவிதமான வைரஸ் நோய்களுக்கு எதிரான வேலை செய்யக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.